Register Here!

About Us


டாக்டர் ஹெர்பல் கேர் சென்டர் நிறுவனத்தின் மருத்துவர் பற்றி .....

டாக்டர் பா.மாரிராஜ் BSMS.MD .(சித்தா) இவர் சித்த மருத்துவ இளநிலை படிப்பை 1998-ல் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் முடித்தவர் . தொடர்ந்து 19 வருட காலமாக சித்த மருத்துவராக பணியாற்றி வருகிறார்.


Read More




டாக்டர் ஹெர்பல் கேர் சென்டர் நிறுவனத்தை பற்றி:-

தற்காலத்தில் மருத்துவமனைகள் பெருகிவிட்டன, ஆனால் அதற்கேற்ப நோய்களின் எண்ணிக்கை மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை, மருத்துவ அறிவியல் மென் மேலும் வளர்ச்சியடைந்தாலும், உடனடி நோய்களுக்கு அவசர சிகிச்சை இருந்தாலும், நாள்பட்ட நோய்களுக்கு பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள் என்பது நவீன மருத்துவத்தில் இல்லை.

Read More

Treatment Disease

Medicines

Client Testimonials

Client Testimonials


Common Problems

  • 1.முடி உதிர்தல் என்றால் என்ன?
  • ❖ சாதாரணமாக தலை வாரும் போது தலையின் எல்லா பகுதியில் இருந்தும் சிலமுடிகள் பாதியாகவும், சில வேருடனும், சிலநுனி வெடித்தும் உதிரும். இதுவே சாதாரண மான முடிஉதிர்வு ஆகும்.
  • 2.ஒரு நாளைக்கு எத்தனை முடி வரை உதிரலாம்?
  • ❖ தலையின் எல்லா பகுதியில் இருந்தும் ஒரு நாளைக்கு10 முதல் 15 முடி வரை உதிர்வது இயல்பானதே.
  • 3.தலைக்கு எண்ணெய் தேய்ப்பதன் அவசியம் என்ன?
  • ❖ வெப்ப நாடான நமது நாட்டில், வெப்பத்தை தணிக்கவும்,பகலில் UV RAYS பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பழக்கம் பலகாலமாக பாரம்பரியமாக நம்மால் பின்பற்ற பட்டு வருகிறது.
  • 4.தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதால்(OIL BATH) கிடைக்கும் பலன் என்ன?
  • ❖ உடல் வெப்பத்தை சீராக வைக்கவும், தோலை பராமரிக்கவும், சைனஸ் தொந்தரவு, கண்ணோய் வராமல் தடுக்கவும் எண்ணெய் குளியல் பயன்படுகிறது.
  • 5. எண்ணெய் தேய்க்காமல் முடி உதிர்வதை சரி செய்ய முடியாதா?
  • ❖ ஹார்மோன் மாற்றத்தால் முடியின் வேர்க்கால்கள் பாதிக்கப்பட்டு அதனால் முடிகொட்டுவதை தடுக்க தலைக்கு எண்ணெய் தேய்த்து 6 முதல் 8 மணி நேரம் ஊற வைப்பதன் மூலம் தான் ஹார்மோன் பாதி்ப்பை சரி செய்ய முடியும். வெளி பிரயோகமாக எண்ணெய் தேய்ப்பதோடு உள்மருந்துகளும் அவசியம்.
  • 6.எண்ணெய் தேய்த்தால் முகத்தில் எண்ணெய் வடியாதா?
  • ❖ நமது தோலில் சுரக்கும் எண்ணெய் சுரப்புகள் தோலை சுருக்கத்திலிருந்து காத்து மினுமினுப்பை தந்து, நமது இளமையை பாதுகாக்கிறது. எண்ணெய் சுரப்பிகள் வறட்சி அடைவதே முதுமைக்கு காரணம். எனவே எண்ணெய் தேய்ப்பது அவசியம்.
  • 7.கடைகளில் கிடைக்கும் எண்ணெய் தவறானதா?
  • ❖ கடைகளில் கிடைக்கும் எண்ணெய்களில் மினரல் ஆயில் (பெட்ரோலியம் பை ப்ராடக்ட்) கலந்து உள்ளது. இது நமது பாதிக்கப்பட்ட முடியை மேலும் பாதிக்கும்.
  • 8.பகலில் எண்ணெய் தேய்ப்பதற்கும் இரவில் எண்ணெய் தேய்ப்பதற்கும் என்ன வித்தியாசம்?
  • ❖ பகலில் எண்ணெய் தேய்ப்பது UV ரேடியேஷனில் இருந்து நம்மை பாதுகாக்க. இரவில் எண்ணெய் தேய்ப்பது ஹார்மோன் பாதிப்பை சரி செய்வதற்கு. முடிக்கு ஊட்டமளிக்க (nourishment) பகலில் எண்ணெய் தேய்ப்பது அவசியம்.
  • 9.குளிப்பதற்கு முன்னால் எண்ணெய் தேய்க்க வேண்டுமா? பின்னால் தேய்க்க வேண்டுமா?
  • ❖ எண்ணெய் குளியலுக்கு மட்டும் குளிப்பதற்கு முன்னால் காய்ச்சிய எண்ணெய் தேய்க்க வேண்டும். தினமும் குளித்த பின் தலைக்கு எண்ணெய் தேய்ப்பது UV ரேடியேஷனில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
  • 10.எண்ணெயை காய்ச்சி தேய்ப்பது சரியா? தவறா?
  • ❖ செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை நேரடியாக பயன்படுத்தலாம். அதில் மூலிகைகள் கலந்து காய்ச்சி பயன்படுத்த மருத்துவர் ஆலோசனை அவசியம்.
  • 11.எண்ணெய் தேய்ப்பதால் முகப்பரு வருமா?
  • ❖ எண்ணெய் தேய்ப்பதால் கண்டிப்பாக முகப்பரு வராது.
  • 12.பகலில் ஏன் எண்ணெய் தேய்க்க வேண்டும்?
  • ❖ நமது வெப்ப நாட்டில், முடி உதிர்வு தொந்தரவு இல்லாதவர்களும் வெயிலில் இருந்தும், UV RAYS பாதிப்பில் இருந்தும் தம்மை பாதுகாத்து கொள்ள பகலில் எண்ணெய் தேய்ப்பது அவசியம்.
  • 13.தண்ணீர் மாறினால் ஊர் மாறினால் முடி கொட்டுமா?
  • ❖ தண்ணீர் மாறுவது மட்டும் காரணம் அல்ல. பரம்பரை வழுக்கை உள்ளவர்களுக்கு இது ஒரு தூண்டும் காரணியாக அமையும்.
  • 14.தினமும் ஷாம்பூ போடுவதால் முடி கொட்டுமா?
  • எண்ணெய் குளியல் மற்றும் எண்ணெய் தேய்க்கும் பழக்கம் இல்லாதவர்கள் தினமும் ஷாம்பூ போடுவதால் அதில் உள்ள chemicals முடியின் வேர்க்கால்களில் வறட்சி ஏற்படுத்தி அதனால் முடி கொட்டும். தினமும் எண்ணெய் தேய்க்கும் பழக்கம் நல்லது.
  • 15.கடைகளில் கிடைக்கும் சீயக்காய் சரியா? தவறா?
  • ❖ உண்மையான சீயக்காய்க்கு அதிக நுரை வராது. அவ்வாறு அதிக நுரை வந்தால் அது ஷாம்புவை விட மோசமானது.
  • 16.டென்ஷன், ஸ்ட்ரெஸ் இவற்றால் முடி கொட்டுமா?
  • ❖ முடி கொட்டுவதற்கு முதற்காரணம் பரம்பரை. இரண்டாவது காரணம் டென்ஷன், ஸ்ட்ரெஸ். இவை முடியின் ஆயுள் காலத்தை குறைக்கின்றன.
  • 17. உடம்பு heat ஆனால் முடி கொட்டுமா?
  • ❖ முடி கொட்டுவதற்கு முதற்காரணம் பரம்பரை. இரண்டாவது காரணம் டென்ஷன், ஸ்ட்ரெஸ். இவை முடியின் ஆயுள் காலத்தை குறைக்கின்றன. மூன்றாவது காரணம் உடல் வெப்பநிலை அதிகரிப்பு. உடல் சூட்டை தணிக்கும் உணவு பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை மாற்றங்களை கடைப்பிடிக்க தவறியதே பல நோய்களுக்கு காரணம்.
  • 18.ஹீட்டர் போடுவதால் அல்லது hair colouring செய்வதால் முடி கொட்டுமா?
  • ❖ பரம்பரை ஹார்மோன் பாதிப்பால் வழுக்கை விழும் போது முடியின் வேர்க்கால்களுக்கு செல்லும் இரத்தஓட்டம் குறைந்து முடிக்குழிகள் சுருங்கி விடும். இந்த நிலையில் ஹுட்டர், மற்றும் hair colouring செய்வதால் வேர்க்கால்கள் மேலும் பாதிப்படையும்.
  • 19.ஈரத்தலையுடன் எண்ணெய் தேய்க்கலாமா?
  • ❖கூடாது. அப்படி செய்தால் பொடுகு உருவாகி முடி கொட்டும் வாய்ப்பு அதிகம்.
  • 20.பேன், ஈறு இருந்தால் முடி கொட்டுமா?
  • ❖ கண்டிப்பாக கொட்டும்.பேன் தலையில் உள்ள இரத்தத்தை உறிஞ்சி குடிப்பதால் முடியின் வேர்க்கால்கள் பாதித்து முடி கொட்டும்.
  • 21.எனக்கு தலையில் ஒரு இடத்தில் மட்டும் வட்டமாக வழுவழுப்பாக உள்ளது ஏன்?
  • இது புழுவெட்டின் அறிகுறி. , Autoimmune Disorder.இதற்கு வெளிபிரயோகமாக வெங்காயச்சாறு தேய்த்தல் போன்றவை பயன் தராது. உள்மருந்துகள் அவசியம்.
  • 22.புழுவெட்டு வரக் காரணம் என்ன?
  • ❖ தெளிவான காரணம் கண்டறியப்படவில்லை. அதிகப்படியான டென்ஷன், ஸ்ட்ரெஸ் இருந்தால் புழுவெட்டு வரலாம்.
  • 23. புழுவெட்டு ஆண்களுக்கு மட்டும் தான் வருமா?
  • ❖ இல்லை. ஆண் பெண் இருபாலருக்கும் வரலாம்.
  • 24.முடி கொட்டுவதை நிறுத்த என்ன சாப்பிட வேண்டும்?
  • ❖இரும்பு சத்து அதிகம் உள்ள கீரைகள், நெல்லிக்காய், கறிவேப்பிலை இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
  • 25.எனக்கு முடி வறட்சியாக உள்ளது. அதை தடுப்பது எப்படி?
  • ❖செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் கொண்டு எண்ணெய் குளியல், தினமும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் தலைக்கு தேய்த்து வந்தால்சரியாகும்.
  • 26.முடியை ஆரோக்கியமாக பாதுகாப்பது எப்படி?
  • ❖Oil bath,தலைக்கு எண்ணெய் தேய்த்து வருதல், Chemical ஷாம்புகளை தவிர்த்தல், ஹீட்டர் பயன்படுத்தாமை,Hair colouringசெய்யாமல் இருப்பது இவை முடியை பாதுகாக்கும்.
  • 27.என் கூந்தல் எண்ணெய் பசையுடன் உள்ளது. அதை பராமரிப்பது எப்படி?
  • ❖கூந்தல் எண்ணெய் பசையுடன் இருப்பது நல்லது தான். Oil bath,குளியலுக்கு மூலிகை ஷாம்பு பயன்படுத்தி வருவது நல்லது.
  • 28.எனக்கு வெயில் காலத்தில் மட்டும் முடி கொட்டுகிறது ஏன்?
  • ❖பித்த உடம்பினர்க்கு உடல் வெப்பம் அதிகமாவதால் வெயில் காலத்தில் முடி கொட்டும். வாரம் இருமுறை எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • 29. எனக்கு பனிக்காலத்தில் மட்டும் முடி கொட்டுகிறது ஏன்?
  • ❖ பனிக்காலத்தில் தோல் வறட்சி அடைவதால் முடியின் வேர்க்கால்கள் பாதிப்படைந்து முடி கொட்டலாம்.
  • 30..தலைக்கு தேங்காய் எண்ணெய் நல்லதா அல்லது நல்லெண்ணெய் நல்லதா?
  • ❖ தினமும் பகலில் தேய்க்க செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயும் எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணெயும் நல்லது.
  • 31.கற்றாழையை தலைக்கு தேய்த்து குளித்து வரலாமா?
  • ❖குளிக்கலாம். இது குளிர்ச்சி தன்மை கொண்டது என்பதால் சைனஸ், ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
  • 32.ஏதாவது நோய்க்கு மருந்து சாப்பிட்டு வந்தால் முடி கொட்டுமா?
  • ❖ சில நவீன மருந்துகள் முடி கொட்டுவதை அதிகப்படுத்தலாம்.
  • 33.தூக்கம் இல்லாவிட்டால் முடி கொட்டுமா?
  • ❖ உடல் வெப்பம் அதிகரிக்கும். டென்ஷன், ஸ்ட்ரெஸ் ஏற்படும். எனவே முடி கொட்டும்.
  • 34.தலை முடியை எப்படி சீவ வேண்டும்?
  • ❖அடிக்கடி தலை வாரக்கூடாது.அழுத்தம் கொடுக்காமல் சீவ வேண்டும்.
  • 35.உப்பு தண்ணீரில் குளித்தால் முடி கொட்டுமா?
  • ❖ஹார்மோன் பாதிப்பு உள்ளவர்களுக்கு தண்ணீர் மாறினால் முடி கொட்டும். குளோரின் கலந்த தண்ணீர் முடியை ப்ளீச் செய்து விடும் என்பதால் அதை பயன்படுத்த கூடாது.
  • 36.தண்ணீர் அதிகமாக குடிக்க வில்லை என்றால் முடி கொட்டுமா?
  • ❖ஆமாம். தோல் வறட்சி ஆகும்.உடல் வெப்பம் அதிகரித்து முடி கொட்டும்.
  • 37.AC அறையில் இருந்தால் முடி கொட்டுமா?
  • ❖ தோல் வறட்சி அடைவதால் முடி கொட்டலாம்.
  • 38.AC அறையில் இருந்தால் பொடுகு வருமா?
  • ❖தோல் வறட்சி, Fungal பாதிப்பு ஏற்படும். அதனால் பொடுகு வர வாய்ப்புள்ளது.
  • 39.காய்ச்சல் வந்து சரியான பிறகு ஏன் முடி கொட்டுகிறது?
  • ❖உடல் வெப்பம் அதிகரித்தல், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் இவற்றால் முடி கொட்டும்.
  • 40.தலையில் சோரியாஸிஸ் வந்தால் முடி கொட்டுமா?
  • ❖பொடுகில் கண்டிப்பாக முடி கொட்டும். ஆனால் சோரியாஸிஸில் முடி கொட்டும் வாய்ப்பு குறைவு.
  • 41. சுகர் வந்தால் முடி கொட்டுமா?
  • ❖ முடி கொட்டலாம். சிறிது அடர்த்தி குறையும்.
  • 42.அறுவை சிகிச்சைக்கு பின் வந்தால் முடி கொட்டுமா?
  • ❖உடம்பு இயல்பு நிலைக்கு வரும் வரை முடி கொட்டலாம்.
  • 43.முட்டை வெள்ளை கருவை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்குமா?
  • ❖முட்டை வெள்ளை கரு முடிக்கு ஊட்டமளிக்கும். முடி கொட்டுவதற்கான காரணத்தை கண்டறிந்து முழுவதும் சரி செய்தால் மட்டுமே முடிஉதிர்வு நிற்கும்.
  • 44.கறிவேப்பிலை, நெல்லிக்காய், பேரிச்சம் பழம் சாப்பிட்டும் முடி கொட்டுகிறது ஏன்?
  • ❖இவைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். ஹார்மோன் பாதிப்பு இருந்தால் இவை பெரிதாக பயனளிக்காது.
  • 45. கடைகளில் கிடைக்கும் எண்ணெய்களில் மூலிகைகள் சேர்த்து காய்ச்சி தடவலாமா?
  • ❖கடைகளில் கிடைக்கும் எண்ணெய்களில் மினரல் ஆயில் கலந்து உள்ளதால், அதில் மூலிகைள் சேர்ப்பதால் பயனில்லை. மேலும் காய்ச்சும் பக்குவம் பலருக்கு தெரிவதில்லை.

Dandruff

  • 1.எண்ணெய் தேய்ப்பதால் தலையில் தூசி படிந்து பொடுகு வருமா?
  • ❖ பொடுகுக்கும் தூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எண்ணெய் தேய்க்காமல் இருப்பதால் தான் தலைமுடிக்குள்ளே தூசி செல்ல வாய்ப்பு உண்டு.
  • 2.பொடுகு தொல்லை இருந்தால் முடி கொட்டுமா?
  • ❖ பொடுகு தொல்லை இருந்தால் கண்டிப்பாக முடி கொட்டும்.தலையின் மேல் தோல் பகுதியை பொடுகு பாதிப்பதால் முடி கொட்டும்.
  • 3.தலையில் அரிப்பு இருந்தால் முடி கொட்டுமா?
  • ❖ தலையின் மேல பகுதியில் பூஞ்சை தொற்று(fungal) இருப்பதால் அரிப்பு ஏற்படும். அதனால் முடி கொட்டும்.
  • 4.ஒருநாள் தலைக்கு குளிக்கவில்லை எனினும் பொடுகுவருகிறது ஏன்?
  • ❖ சுத்தமின்மையே பொடுகுக்கு காரணம்.Chemicals அல்லாத மூலிகை ஷாம்பு போட்டு குளிப்பதும் பக்கவிளைவுகள் இல்லாத உள் மற்றும் வெளி மருந்து களை எடுத்து கொள்வதும் பொடுகுக்கு நிரந்தர தீர்வு தரும்.
  • 5. தினமும் ஷாம்பு பயன்படுத்தாவிட்டால் அரிப்பு வருகிறது. ஏன்?
  • ❖தலையில் பொடுகோடு சேர்த்து பூஞ்சை(fungal) தொற்று நோய்கள் இருப்பதால் அரிப்பு ஏற்படும். இதற்கு மருத்துவம் மேற்கொள்வது அவசியம்
  • 6.தினமும் கடைகளில் கிடைக்கும் பொடுகு ஷாம்பு பயன்படுத்துவது தவறா?
  • ❖கண்டிப்பாக தவறு. பொடுகுக்கு தலையில் போடும் Anti dandruff ஷாம்பு வில் உள்ளChemicals ஆனது fungal ஐ குறைக்கும்.ஆனால் முடியின் வேர்க்கால்களை மோசமாக பாதிக்கும்.
  • 7.தலையில் மாவு போல் படிகிறது. ஏன்?
  • ❖பொடுகு முற்றிய நிலையில் இவ்வாறு மாவு போல படியும். ஆரம்ப நிலை சோரியாஸிஸிலும் இவ்வாறு படியும். உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.

Male Hair Loss

  • 1..சாதாரண முடி உதிர்வதற்கும், வழுக்கையால் முடிஉதிர்வதற்கும் என்ன வித்தியாசம்?
  • ❖ தலையின் எல்லா பகுதியில் இருந்தும் ஒரு நாளைக்கு10 முதல் 15 முடிவரை உதிர்வது இயல்பே. ஆண்களுக்கோ, பெண்களுக்கோ ஒரு இடத்தில் மட்டும் குறிப்பாக முன்பக்கம் மட்டும் பல முடிகள் வேரோடு உதிர்ந்து அந்த இடத்தில் மீண்டும் முடி வளர வில்லை எனில் அது வழுக்கைக்கான அறிகுறி. அந்த இடத்தில் முடியை பிடுங்கினால் வேரோடு வரும்.
  • 2.ஆண்களுக்கு முடி கொட்டுவது எதனால்?
  • ❖ ஆண்களுக்கு முடி கொட்ட பல காரணங்கள் இருந்தாலும், 80% ஆண்களுக்கு பரம்பரை காரணமாக முடி கொட்டி வழுக்கை விழுகிறது. தற்போது இளம் வயதிலேயே பரம்பரை ஹார்மோன் பாதிப்பால் முடி கொட்டி வழுக்கை விழ ஆரம்பித்து விடுகிறது.
  • 3.எனக்கு மட்டும் தலை முடி ஏன் கொட்டுகிறது?
  • ❖ உங்கள் பரம்பரை தான் காரணம், அப்பா,அப்பாவழி தாத்தா, அம்மா வழி தாத்தா, தாய் மாமா இவர்களில் யாருக்காவது வயதான காலத்தில் முடி கொட்டி வழுக்கை இருந்தாலும், தற்போது இளம் வயதிலேயே பரம்பரை காரணமாக முடி கொட்டி வழுக்கை விழுகிறது. பரம்பரை பாதிப்பு இல்லாத காரணத்தால் மற்றவர்க்கு முடி கொட்டாமல் இருக்கலாம்.
  • 4.முடி கொட்டினாலே வழுக்கை தலைதானா?
  • ❖ பரம்பரையில் வழுக்கை இருந்து, குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வேரோடு முடி கொட்டினாலே, அது வழுக்கைக்கான அறிகுறி தான்.
  • 5. எனக்கு side-ல் எல்லாம் முடி உள்ளது. முன்னால் மட்டும் முடி கொட்டி நெற்றி ஏறிக்கொண்டு போகிறதே.ஏன்?
  • ❖ வழுக்கை என்பது பக்கவாட்டில் வராது. எந்த இடத்தில் முடி கொட்டி வழுக்கை விழவேண்டும் என்பதை பரம்பரை தான் முடிவு செய்கிறது. இது முன்சொட்டை, நடுசொட்டை,பின்சொட்டை, முழு சொட்டை என பல வகைப்படும்.
  • 6.ஹெல்மெட் அணிவதால் முடி கொட்டுமா?
  • ❖ சுத்தம் இல்லாத ஹெல்மெட் அணிவதால் fungal பாதிப்பு ஏற்படும். அதனால் முடி கொட்டும் வாய்ப்பு உண்டு. தலையில் துணி கட்டி கொண்டு அதன் மேல் ஹெல்மெட் அணிவது பாதிப்பை தடுக்கும்.
  • 7.என் அப்பாவுக்கு வழுக்கை இல்லை. எனக்கு ஏன் வழுக்கை உள்ளது?
  • ❖ அம்மா வழி தாத்தா, தாய்மாமா இவர்களுக்கு வழுக்கை இருந்தாலும், உங்களுக்கு முடி கொட்டி வழுக்கை விழும்.
  • 8.நைட் ஷிப்ட் பார்த்தால் முடி கொட்டுமா?
  • ❖ பரம்பரை வழுக்கை இருப்பவர்களுக்கு, இரவுப்பணியில் உடல் வெப்பம் அதிகரிப்பதாலும், ஹார்மோன் பாதிப்பாலும் முடி கொட்டும்.
  • 9.கெட்ட பழக்கம் இருந்தால் முடி கொட்டுமா?
  • ❖ பரம்பரை வழுக்கை இருப்பவர்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம், மது பழக்கம் ஆகியவை சீக்கிரமாக வழுக்கை விழுவதை தூண்டும் ஒரு காரணியாக அமையும்.
  • 10.எனக்கு முடி உதிரவில்லை.ஆனால் scalp- மண்டை தெரிகிறது. ஏன்?
  • ❖ ஹார்மோன் பாதிப்பால் முடியின் வேர்க்கால்கள் வலுவிழந்து மெலிந்து அடர்த்தி குறையும். குறைந்த எண்ணிக்கையில் முடிகள் நீண்ட காலம் கொட்டுவதால் நாம் அதை கவனிக்க தவறிவிடுகிறோம்.
  • 11. பரம்பரையாக வழுக்கை வரும் எனில் என்அண்ணனுக்கு மட்டும் வழுக்கை வரவில்லை. எனக்கு மட்டும் ஏன்?
  • ❖ பரம்பரை வழுக்கையை தடுக்கலாம் அல்லது தள்ளி போடலாம். உங்களுடைய உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் உங்களுக்கு சீக்கிரம் வழுக்கை விழுந்து இருக்கலாம்.
  • 12.பரம்பரை வழுக்கை சீக்கிரம் வர காரணம் என்ன?
  • ❖ தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பழக்கம்இன்மை, டென்ஷன், ஸ்ட்ரெஸ், Anti fungal chemical ஷாம்பூகளை அதிகமாக பயன்படுத்துதல், முடி பராமரிப்பின்மை, ஹுட்டர் பயன்படுத்துதல், Hair colouring செய்வது, காற்றில் மாசு அதிகமாதல் இவையெல்லாம் பரம்பரை வழுக்கையை தூண்டும் காரணிகள் ஆகும்.
  • 13.பரம்பரை வழுக்கைக்கு காரணமான ஹார்மோன் எப்படி முடியை பாதிக்கிறது?
  • ❖ பரம்பரை ஹார்மோன் பாதிப்பால் முடியின் வேர்க்கால்களுக்கு செல்லும் இரத்தஓட்டம் குறைந்து முடிக்குழிகள் சுருங்கி விடும். மேலும் வேர்க்கால்கள் வலுவிழந்து மெலிந்து அடர்த்தி குறையும்.
  • 14.ஹார்மோன் பாதிப்பை ஷாம்பூ மூலம் சரி செய்ய முடியாதா?
  • ❖ 20 முதல் 30 செகண்ட் வரை மட்டுமே தலையின் மேல்புறம் இருக்கும் ஷாம்புவால் உடலின் உள்பகுதியில் உள்ள முக்கிய ஹார்மோன் பாதிப்பை சரி செய்ய முடியாது. அப்படி இருந்தால் இந்தியாவில் வழுக்கை தலை என்பதே இல்லாமல் இருக்கும்.
  • 15.தஹார்மோன் பாதிப்பை சரி செய்ய கண்டிப்பாக உள்மருந்துகள் சாப்பிட வேண்டுமா?
  • ❖ ஆம். கண்டிப்பாக சாப்பிட வேண்டும். தேவை இல்லாமல் அதிகமாக சுரக்கும் DHT ஹார்மோனை குறைக்க பக்கவிளைவுகள் இல்லாத மூலிகை மருந்துகள் அவசியம்.
  • 16..எனக்கு முடி கொட்டவில்லை ஆனால் மெலிந்து கொண்டே போகிறது. ஏன்?
  • ❖ DHT ஹார்மோன் பாதிப்பு ஆரம்ப நிலையில் இருந்தால் முடி மெலியும். தைராய்டு ஹார்மோன் பாதிப்பு உள்ளவர்களுக்கும் முடி கொட்டாமல் மெலிந்து அடர்த்தி குறையும்.
  • 17. என் நண்பன் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதே இல்லை. ஆனால் அவனுக்கு முடி கொட்டவில்லை. ஏன்?
  • ❖அவருக்கு பரம்பரை பாதிப்பு இல்லாமல் இருக்கலாம். அதை வைத்து முடிவெடுக்க முடியாது.
  • 18.முடியின் நுனி வெடிப்புக்கு காரணம் என்ன?
  • ❖சத்து குறைவாலும், அதிக வறட்சியாலும், Chemical ஷாம்புகளை அதிகமாக பயன்படுத்துவதாலும் முடிநுனி வெடிக்கும்.
  • 19.தினமும் ஆண்கள் தலைக்கு குளிக்கலாமா?
  • ❖ கண்டிப்பாக குளிக்கலாம். தினமும் தலைக்கு குளிப்பது நன்மை தரும்.
  • 20.பரம்பரை வழுக்கையைத் தடுக்க முடியாதா?
  • ❖ பரம்பரை காரணமாக வரும் வழுக்கை என்பது தற்காலத்தில் இளம் வயதிலேயே வந்து விடுகிறது. அதை ஆரம்ப நிலையில் அறிந்து முறையாக சிகிச்சை மேற்கொண்டால் தடுக்கலாம், தள்ளி போடலாம்.
  • 21.ஆண்களுக்கு முடி கொட்டுவதை கண்டறிய என்ன டெஸ்ட் உள்ளது?
  • ❖ஆண்கள் முடி உதிர்வதை சுய பரிசோதனை மூலம் அறிந்து கொள்ள முடியும். எந்த விதமான சோதனையும் தேவை இல்லை
  • 22.ஆண்களுக்கு மொட்டை அடித்தால் முடி கொட்டுவது சரியாகுமா?
  • ❖ஆண்களுக்கு பரம்பரை ஹார்மோன் பாதிப்பு முடியின் வேர்க்கால்களை பாதிக்கிறது. மொட்டை அடிப்பதால் அந்த வேர்க்கால்களில் இருந்து மீண்டும் முடி வளராது. இதனால் மேலும் வழுக்கையாகும்.
  • 23. தொப்பி அணிவதால் முடி கொட்டுமா?
  • ❖தொப்பி அணிவது தலையில் உள்ள வியர்வை சுரப்பிகளை பாதிப்பதால் முடி கொட்ட வாய்ப்பு உள்ளது.
  • 24.முடி கொட்டுவதை நிறுத்த நவீன மருத்துவத்தில் Drops வாங்கி தடவி வந்தால் முடி உதிர்வது குறைந்து மீண்டும் அதிகமாக கொட்டுகிறது ஏன்?
  • ❖ முழுமையாக ஹார்மோன் பாதிப்பை சரிசெய்யாத வரை முடி கொட்டுவதை முற்றிலும் நிறுத்த முடியாது.
  • 25.ஹேர் டிரான்ஸ்ப்ளான்ட் செய்த பிறகும் முடி கொட்டுகிறது ஏன்?
  • ❖ ஹேர் டிரான்ஸ்ப்ளான்ட் செய்தாலும், முடியின் வேர்க்கால்களில் ஹார்மோன் பாதிப்பை சரிசெய்யாத வரை முடி கொட்டும்.
  • 26.ஆண்கள் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முடி வெட்ட வேண்டும்?
  • ஆண்கள் மாதத்துக்கு ஒருமுறை முடி வெட்டி கொள்ளலாம். அதிகமாக முடி வைத்துக் கொள்வதும், முடி கொட்டுவதற்கு பயந்து மிகவும் குறைவாக வைத்து கொள்வதும் தவறு.
  • 27.ஹேர் ஜெல் (Water based) பயன்படுத்தி வரலாமா?
  • ❖ ஹேர் ஜெல் பயன்படுத்த கூடாது. அதில் உள்ள Chemicals முடியை பாதிக்கும்.

Female Hair Loss

  • 1.பெண்களுக்கு முடி கொட்டுவது எதனால்?
  • ❖ பெண்களுக்கு ஹீமோகுளோபின் குறைவு, பொடுகு, தைராய்டு ஹார்மோன் பாதிப்பு மற்றும் PCOD ஆகிய காரணங்களால் முடி உதிர்கிறது.
  • 2.பெண்கள் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை தலைக்கு குளிக்கலாம்?
  • ❖ பெண்கள் வாரம் இருமுறை அல்லது மூன்று முறை தலைக்கு குளிக்கலாம். வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பது நல்லது.
  • 3.பின்னல் எலிவால் போல மெலிந்து விட்டது ஏன்?
  • ❖ சத்து குறைவு தான் முக்கிய காரணம். ஹீமோகுளோபின் சத்து குறைபாடு நாட்பட்ட நிலையில் இருந்தால் முடியானது ஊட்டம் குறைந்து மெலியத் தொடங்கும்.
  • 4.பின்னால் கூட பரவாயில்லை. முன்னால் மட்டும் முடி கொட்டுகிறது ஏன்?
  • ❖ஆண்களுக்கு ஹார்மோன் பாதிப்பால் வழுக்கை ஏற்படுவது போல பெண்களுக்கும் ஹார்மோன் பாதிப்பால் முன்பக்கம் முடி கொட்டும்.
  • 5. எனக்கு சத்து குறைவு இல்லை. ஆனால் முடி ஏன் கொட்டுகிறது?
  • ❖ சத்து குறைவு மட்டும் முடி கொட்ட காரணம் அல்ல. பரம்பரை ஹார்மோன் பாதிப்பு, டென்ஷன், ஸ்ட்ரெஸ், காற்றில் அதிக மாசு, பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பாதிப்பு இவற்றாலும் முடி கொட்டலாம்.
  • 6.எனக்கு periods தொந்தரவு உள்ளது. அதனால் முடி கொட்டுமா?
  • ❖ தைராய்டு ஹார்மோன் பாதிப்பு,PCOD, போன்றவற்றால் ஒழுங்கற்ற மாதவிடாய் வரலாம். சத்து குறைவால் குறைவான இரத்தப்போக்கு இருக்கலாம். இதனால் முடி கொட்டுவதற்கு வாய்ப்பு அதிகம்.
  • 7.எனக்கு உடல் எடை அதிகமாக உள்ளது.அதனால் முடி கொட்டுமா?
  • ❖ஹீமோகுளோபின் குறைபாடு, தைராய்டு, PCOD யில் உடல் எடை அதிகமாக லாம். இவையெல்லாம் முடி கொட்ட காரணங்கள் ஆகும்
  • 8.எனக்கு முன்னால் முடி கொட்டுகிறது. மீசை தாடி முடிவளர்ச்சி உள்ளது. ஏன்?
  • ❖பெண்களுக்கு PCOD யில், ஆண்களுக்கான டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். இதனால் ஆண்களை போல முன் வழுக்கை, மீசை தாடி வளரும்.
  • 9.Menopause timeல்முடி ஏன் கொட்டுகிறது?
  • ❖Menopause நிலையில் ஹார்மோன் குறைபாடு, சத்து குறைவு, கால்சியம் சத்து குறைவு இவை ஏற்படும். இதை தொடர்ந்து முடி கொட்டும்.
  • 10..PCOD இருந்தால் முடி கொட்டுமா?
  • ❖கண்டிப்பாக முடி கொட்டும்.
  • 11. .நான் Conceive ஆக இருக்கிறேன். அதனால் முடி கொட்டுமா?
  • ❖ நீங்கள் உண்ணும் உணவில் உள்ள சத்து குழந்தைக்கும் செல்லும். அதனால் உங்களுக்கு சத்து குறைவு ஏற்படுவதால் முடி கொட்டும்.சத்துக்கள் உள்ள உணவை எடுத்து கொள்ள வேண்டும்.
  • 12.எனக்கு குழந்தை பிறந்துள்ளது.அதனால் முடி கொட்டுமா?
  • குழந்தை பிறந்த உடன் முடி கொட்டுவது சாதாரண விஷயம். நல்ல உணவு வகைகளை எடுத்து கொள்ள சிறிது நாளில் சரியாகும்.
  • 13.பெண்களுக்கு முடி கொட்டுவதை கண்டறிய என்ன டெஸ்ட் உள்ளது?
  • ❖பெண்களுக்கு ஹீமோகுளோபின் பரிசோதனை, தைராய்டு, PCOD பரிசோதனை இவைகளின் மூலம் காரணத்தை கண்டறிய முடியும்.
  • 14.இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் முடி கொட்டுமா?
  • ❖❖ ஆம். இயல்பான அளவான 13 கிராமை விட மிகவும் குறைந்தால் முடி உதிர்வது நிச்சயம்.
  • 15.தைராய்டு ஹார்மோன் பாதிப்பில் முடி கொட்டுமா?
  • தைராய்டு ஹார்மோன் மாற்றங்கள் முடியின் வேர்க்கால்களை பாதிப்பதில்லை. முடியை மெலிவடைய செய்து அடர்த்தி குறையும்.
  • 16ஹேர் கன்டிஷனர் என்பது என்ன?
  • ❖ ஹேர் கன்டிஷனர் என்பது முடியின் வறட்சி தன்மையை நீக்கும் ஒன்றாகும்.
  • 17. இயற்கையான ஹேர் கன்டிஷனர் என்பது உள்ளதா? அது என்ன?
  • மூலிகை எண்ணெய், முட்டை வெள்ளை கரு, மருதாணி, வெந்தயம் போன்றவற்றை ஷாம்பு போடுவதற்கு முன் பயன்படுத்தி வரலாம். சீயக்காய், அரப்பு போன்றவையும் இயற்கை ஹேர் கன்டிஷனர்களாகும்
  • 18.இறுக்கமாக பின்னல் போட்டால் முடி கொட்டுமா?
  • ❖ ஆம், Traction alopecia என்ற நோய் நிலை தலை முடியை இறுக்கி பின்னுவதால் வரும்.அந்த இடத்தில் அடர்த்தி குறையும்.
  • 19.பெண்களுக்கு Hair cut செய்வதால் முடி கொட்டுவது சரியாகுமா?
  • ❖ சரியாகாது. சத்து குறைவு, ஹார்மோன் பாதிப்புகளை சரிசெய்தால் மட்டுமே முடி கொட்டுவது சரியாகும்.
  • 20.கர்ப்பதடை மாத்திரை சாப்பிட்டால் முடி கொட்டுமா?
  • ❖ ஆம், ஹார்மோன் சுரப்பில் மாற்றம் ஏற்படும். அதனால் முடி கொட்ட வாய்ப்பு உள்ளது.
  • 21.பெண்கள் வயதுக்கு வரும் போது முடி கொட்டுமா?
  • ஹார்மோன் மாறுபாடு, இரத்த போக்கு இவற்றால் முடி கொட்டலாம். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட இது சரியாகும்.

Contact Us